ரயில் நிலையம் அருகே தலையில்லாமல் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்

ரயில் நிலையம் அருகே தலையில்லாமல் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே தலையில்லாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜஹாங்கிர்புரி மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலையில்லாமல் இருந்த அந்த சடலம் துணியால் சுற்றப்பட்டு உலோகப்பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பெண் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் அவருடைய உடல் கருப்பு நிறத்திற்கு மாறியிருந்தது என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக பாபு ஜக்ஜிவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like