கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்த மனைவி

கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்த மனைவி

திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு முனியம்மாள் என்கிற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

முருகேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று திடீரென தன்னுடைய கணவருக்கு கை,கால்கள் செயலிழந்துவிட்டதாக கூறி, சகோதரன் ஏழுமலை மற்றும் அவருடைய மனைவியை வீட்டிற்கு வருமாறு முனியம்மாள் அழைத்துள்ளார்.

மூன்று பெரும் சேர்ந்து முருகேசனை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர்கள், முருகேசன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அன்றைய தினம் முருகேசனை அடக்கம் செய்வதற்காக வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் போது, அவருடைய கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கேட்கும் போது, சந்தேகத்திற்குரிய வகையில் முனியம்மாள் பதிலளித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கூறிய முனியம்மாள், வழக்கம் போல வெள்ளிக்கிழமையன்றும் கணவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்து தன்னுடைய சகோதரன் ஏழுமலை மற்றும் அவருடைய மனைவியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் .

அவர்களின் உதவிடையுடன் முருகேசனின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலை ஏழுமலை மற்றும் அவருடைய மனைவி, குளிர்சாதன பெட்டிக்கான அட்டைப்பெட்டியில் மறைத்து வைத்தனர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like