குடும்ப பிரச்சனை காரணமாக உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை எத்தனை? அதிர்ச்சி ரிப்போர்ட்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ஒவ்வொரு 3 வாரத்திற்கும் ஒரு பெண் உயிரிழக்க நேரிடுவதாக அந்நாட்டு அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சுவிஸில் குடும்பத் தகராறு காரணமாக கொல்லப்படும், அல்லது தற்கொலை செய்துக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ஆண் ஆவார்.

இதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஒவ்வொரு 3 வாரத்திற்கும் ஒரு பெண் பலியாக நேரிடுகிறது என பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

எனினும், இது குறித்து விரவான அறிக்கையை எதிர்வரும் யூன் மாதம் காவல் துறை வெளியிட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2015ம் ஆண்டு நாடு முழுவதும் நிகழ்ந்த கொள்ளை சம்பவங்களை ஒப்பிடுகையில் கடந்தாண்டு இவை 11 சதவிகிதமாக குறைந்துள்ளது.

அதே சமயம், சிறுவர்கள், சிறுமிகள் மீதான தாக்குதல்களும் கடந்தாண்டு 1.4 சதவிகிதம் குறைந்துள்ளதாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like