சற்று முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் பொலிஸ் பாதுகாப்புடன் நுழைந்த வெளிநாட்டு அகதிகள்

சற்று முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் பொலிஸ் பாதுகாப்புடன் நுழைந்த வெளிநாட்டு அகதிகள்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இன்று (14.06.2019) அழைத்து வரப்பட்டனர்.

உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியின் இரண்டு கட்டமாக அழைத்து வரப்பட்டு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேர் வரையிலானோர் சிக்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

சுமார் இரண்டு மணிநேரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்துகளைப் பெற்ற பின் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர்.

You might also like