புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ் மற்றும் ரயில்கள் சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதி கருதி, இவ்வாறு மேலதிக பஸ் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலதிக ரயில் சேவை ஏப்ரல் மாதம் 7ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் வழமையான போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்துச் சபை ஏப்ரல் மாதம் 6ம் திகதி முதல் 25ம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகளை மேற்கொள்ள இருப்பதாக போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

You might also like