கிளிநொச்சியில் 8 லட்சம் ரூபா பெறுமதியிலான 500 கல் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா பெறுமதியிலான 500 கல் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சிமாவட்டத்தில் உள்ள வீடு அற்றவர்களிற்கான உதவியாக இந்த ஆண்டில் 500 கல் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 500 கல் வீடுகளும் மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் பகிரப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ் வீடுகளிற்கான அனுமதியும் பிரதேச செயலகங்களிற்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த 500 வீடுகளில் 210 வீடுகள் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 10 வீடுகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய குடும்பங களிற்காக ஒதுக கப்பட்டுள்ளது. அதே நேரம் கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு தலா 100 வீடுகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே நேரம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு 90 வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் புதிதாக அமைக்கப்படும் வீடுகள் பொருத்து வீடா அல்லது கல் வீடா என்ற சர்ச்சை நிலவி வரும் சமயத்தில் கல் வீடு இனி கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் தற்போது வழங்கப்படும் வீடுகளும் கல் வீடுகளாகவே அனுமதிக்கப்பட்டுள்ள அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இந்த ஆண்டில் ஐரோப்பிய யூனியனின் 700 வீடுகளும் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. –

You might also like