இன்றைய ராசிபலன் 17.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 17.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

குடும்பத்தில் மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். உங்கள் மனைவி மூலம் செலவு ஏற்படலாம். இன்று எதிர் பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் தேவைகளை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்:

காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சில் பொறுமை அவசியம்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கடகம்:

அலுவலகப் பணிகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். இன்று புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பு இன்று சிறப்பாக இருக்கும். எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்:

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

கன்னி:

உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருந்தாலும் செலவுகளும் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

துலாம்:

இன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:

நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். வெளியில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். விசாகம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:

உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தை முன்னிட்டு வெளியூர் செல்ல நேரிடும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பிற்பகலுக்கு மேல் உடல் அசதி ஏற்படக்கூடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மகரம்:

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். தந்தை வழி உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அதனால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் நண்பர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்லவும் நேரிடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்:

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். மாலையில் நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்:

அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய அன்பும் ஆசிகளும் பெறுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சங்கடம் உண்டாகக்கூடும்.

You might also like