வவுனியா மாவட்ட செயலகத்தில் வானில் பறந்த பலூன்கள் : எதற்காக பறந்தன?

வவுனியா மாவட்ட செயலகத்தில் வானில் பறந்த பலூன்கள் : எதற்காக பறந்தன?

போதையற்ற தேசமாக நம்நாட்டினை ஆக்கவேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு தினத்தின் முன்றாவது நாளாகிய இன்று போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் (26.06) காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில்ஆரம்பமானது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா அவர்கள் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இவ் போதைப்பொருள் ஒழிப்பிற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

You might also like