வவுனியா ஆச்சிபுரம் மக்களுக்கு நேர்ந்துள்ள கதி : தீர்வு கிடைக்குமா?

வவுனியா ஆச்சிபுரம் மக்களுக்கு நேர்ந்துள்ள கதி : தீர்வு கிடைக்குமா?

வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓரு மீள்குடியேற்ற கிராமம் ஆகும். இக் கிராமத்தில் 373 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பலரும் நாளாந்த கூலி வேலை மூலம் தமது சீவனோபாயத்தை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றனர்.

வவுனியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குறித்த கிராம மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு குழாய் கிணறும் பழுதடைந்துள்ள நிலையில் பெரும் சிரமத்தின் மத்தியில் குடிநீரை பெற்று வருகின்றனர்.

மேலும், கிராமத்தில் ஒரு சில வீடுகளில் உள்ள கிணறுகளும் வற்றி வறண்டுவிட்டதனால் தண்ணீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக அம்மக்கள் தெரிவித்தனர்.

இதனால் தமது அன்றாட தேவைகளுக்கு மட்டுமன்றி குடிநீரைக் கூட பெற முடியாத நிலையில் அம் மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

You might also like