வவுனியா ஒமந்தை பகுதியில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஒமந்தை பகுதியில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா, ஓமந்தையில் வாகன விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஓமந்தையில் இருந்து பன்றிகெய்தகுளம் நோக்கி சென்ற கப் ரக வாகனத்தை தனியார் பேருந்து முந்திச்சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த கப் ரக வாகனசாரதி 22 வயதுடைய விதுசன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

You might also like