வவுனியா அரச விதை உற்பத்திப்பண்ணையில் நிதி மோசடியா? விசாரணைகள் முன்னேடுக்கப்படுமா?

வவுனியா அரச விதை உற்பத்திப்பண்ணையில் நிதி மோசடியா? விசாரணைகள் முன்னேடுக்கப்படுமா?

வவுனியா அரச விதை உற்பத்திப்பண்ணையில் பெரும்போக நெல் அறுவடையின்போது நெல் அறுவடை இயந்திரம் வெளி நபர்களுக்கு இரவு பகலாக வழங்கப்பட்டும் அதில் 20 இலட்சம் ரூபா நிதி ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் பண்ணையிலிருந்த பயன் தரும் பலா மரங்கள் வெட்டி குற்றியாக்கி பாரஊர்தியில் வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா அரச விதை உற்பத்திப்பண்ணையிலுள்ள நெல் அறுவடை செய்யும் இயந்திரம் கடந்த பெரும்போக நெல் அறுவடையின்போது பிரதம செயலாளர் அல்லது மாகாண விவசாயப்பணிப்பாளரின் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் வெளி நபர்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு இரவு பகலாக பணிகள் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வவுனியா, பண்ணை முகாமையாளரின் உதவியுடன் ஒரு ஏக்கருக்கு 15ஆயிரம் ரூபா முதல் 12ஆயிரம் ரூபா வரையில் மகாறம்பைக்குளம், பூந்தோட்டம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் , மாகாண விவசாயப்பணிப்பாளர், ஆகியோரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயங்களில் தொடர்புபட்டவர்கள் எனச்சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராக இடமாற்றம் செய்யப்படவோ முழுமையான விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பண்ணையிலுள்ள பயன்தரும் மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி பண்ணை ஊழியர்களைக் கொண்டு குற்றியாக்கி பாரஊர்தியில் ஏற்றி செல்லப்பட்ட வெளி நபர்களுக்கு ஜந்து இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விரிவான விசாரணைகள் நடாத்தி நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like