கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணிளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இராமநாதன் கமம் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பின்புறமாக பார்த்தவாறு பயணித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like