பலபிட்டிய மேல் நீதிமன்றத்தின் ஆவணக் களஞ்சியத்திற்குள் கை வரிசையை காட்டிய திருடர்கள்

பலபிட்டிய மேல் நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் மற்றும் ஆவண களஞ்சியம், திருடர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதடன் இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. வழக்குகான உரிய சான்று பொருட்கள், ஆவணங்கள் என்பன பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் ஊடாக நேற்றிரவு சிலர் திருடமுற்பட்டுள்ளனர்.

விசாரணைகளை எல்பிட்டிய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரும், அம்பலாங்கொட பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஆவணக் களஞ்சிய அறையிலிருந்த எந்தவொரு வழக்குக் கோவையும் காணாமல் போகவில்லை என அந்த களஞ்சிய அறைக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நீதிமன்ற தொகுதியில் அமைந்துள்ள, நீதவான் நீதிமன்றத்தில், அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வரும் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தகர் மாதுவகே சரத் கொலை, காலி கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் தலைவர் ஹெலம்பகே பிரேமசிறி கொலை, அம்பலாங்கொட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை சுட்டுக் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like