இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் முதன்மை பெறுபேறுகள்

2016ம் ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.  பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களிற்கும் நியுஸ்வன்னி இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.

இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் படி கிளிநொச்சி மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லுரி முதன்மை பெறுபேறுகள் அதிகம் கொண்ட பாடசாலைகளாக உள்ளது.

முதல் முறையாக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் 02 9ஏ சித்திகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள். முழுமையான விபரம் விரைவில்…

………..

பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான சிக்கல்கள் இருப்பின் 1911 அல்லது பாடசாலைப் பரீட்சைகள் பிரிவின் 011 278 42 08 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு வினவமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் தொடர்பில் மீள்திருத்தம் செய்வதாயின், அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்குள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

பாடசாலை பரீட்சார்த்திகளின் மீள்திருத்த விண்ணப்பங்களுக்கான முடிவுகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You might also like