கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க, இந்திய போர்க் கப்பல்கள்

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்களில் ஒன்றான தர்சக் போர்க்கப்பல் இன்று மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இக்கப்பல் எதிர்வரும் 30ம் திகதி வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தை கப்பல் வந்தடைந்த போது இலங்கை கடற்படையினரின் சம்பிரதாய மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கப்பலின் கட்டளைத்தளபதி பியுஷ் பவ்சி மற்றும் இலங்கைக் கடற்படையின் மேற்குப்பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல ஆகியோருக்கிடையில் கடற்படைத் தலைமையத்தில் சிநேகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

தர்சக் போர்க்கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கை வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பயிற்சி கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like