கிளிநொச்சியில் மரத்திற்கு அசிட் வீச்சு

கிளிநொச்சியில் மரத்திற்கு அசிட் வீச்சு

கிளிநொச்சி, ஏ9 பிரதான வீதியில் உள்ள மரமொன்றிற்கு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் நிழல் பெறுவதற்கு பயனாக உள்ள குறித்த மரத்திற்கு நபர் ஒருவர் நேற்று அதிகாலை அசிட் ஊற்றியுள்ளார்.

இதனை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கும் கரைச்சி பிரதேச சபைக்கும் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் இரு சந்தேகநபர்களை கைது செய்திருந்த நிலையில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மரத்தை சுற்றி உள்ள மண் அகற்றப்பட்டு புதிய மண் இடப்பட்டு சீர் செய்வதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இன்னும் சில நாட்களின் பின்னர் மரம் உயிரோடு இருக்குமா? அல்லது இறந்து போகுமா? என்பது தெரியவரும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like