வவுனியா கோமரசங்குளத்தில் பதட்டநிலை :இருவர் தப்பியோட்டம் : ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா கோமரசங்குளத்தில் பதட்டநிலை :இருவர் தப்பியோட்டம் : ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இன்றிரவு (30.06.2019) 7.30 மணியளவில் இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண் கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிலில் சென்றுள்ளனர்.

அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது கணவன் காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் கணவரின் உதவியுடன் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 வயதுடைய பெண்ணே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like