கிளிநொச்சி வைத்தியசாலை மலசலகூடத்தில் சுகாதார சீர்கேடு

கிளிநொச்சி வைத்தியசாலை மலசலகூடத்தில் சுகாதார சீர்கேடு

கிளிநொச்சி வைத்தியசாலையின் பொதுமக்கள் பயன்படுத்தும் மலசலகூடத்தில் சுகாதார சீர்கேடு தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் உள்ள மலசலகூடங்கள் நிறைந்து வழிவதாகவும், பெண்கள் பயன்படுத்தும் மலசல கூடத்தில் சுகாதார துவாய்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உரிய முறையில் கழிவு முகாமைத்துவம் பேணப்படாமையால் மக்கள் நாளாந்தம் அவதியுறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு பல நூற்று கணக்காண வெளிநோயாளர்கள் குறித்த வைத்தியசாலைக்கு வருகை தருவதுடன், நோயாளர் விடுதிகளில் தங்கிநின்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிடவும் பலர் வருகை தருகின்றனர். அவ்வாறு வை்ததியசாலை சேவையை பெற்றுக்கொள்ள வருகைதரும் மக்களிற்கு இவ்வாற நிலை காணப்படுகின்றமையால் சுகாதாரத்தை பேண முடியாதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் மலசலகூடத்தின் இன்றைய நிலையே இது. சில காட்சிகளை ஒளிபரப்ப முடியாத அருவருப்பானவை என்பதால் நாம் அவற்றை தவிர்த்துள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கே பெரிய வைத்தியசாலையாக காணப்புடும் குறித்த வைத்தியசாலையின் சுகாதாரம் தொடர்பில் இதுவரை அதிகாரிகள் பார்வையிடுவதில்லையா எனவும், சாதாரணமான விடயங்களிற்கு வழக்குகளை தொடரும் சுகாதார பரிசோதகர்களும் அதிகாரிகளும், இவ்வைத்தியசாலையின் சுகாதாரம் தொடர்பில் கண்டுகொள்ளாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களிற்கான சுகாதார வசதியினை உறுதிப்படுத்தி தருமாறும், முறையான கழிவகற்றலை மேற்கொள்வதற்கான வசதிகளை வைத்தியசாலைக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like