க.பொ.த சாதாரண தர பெறுபேற்றில் வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளது.

இதனடிப்படையில் தமிழ் மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 11 மாணவிகள் 8 ஏ மற்றும் பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி தமிழ் மொழி மூலத்தில் மயூரி பேரின்ப நாயகம், கிசோபிகா சஜரூபன், நிதிகா கரிகரசக்தி, சுஜித்திகா ஜெயபற்றிக் ரஞ்சித், தர்சிகா கிரிதரன், கிருசிகா திருச்செல்வம், சாம்பவி தவராசா, கோபிசாளினி குமாரசிங்கம், லதுசிகா கிருபானந்தம் ஆகிய மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

இதேவேளை ஆங்கில மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 5 மாணவிகள் 8 ஏ மற்றும் பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி சஜனி கணேசலிங்கம், சின்மதி சத்தியலிங்கம், மதுசா ஜெயக்குமார், லபிரா அகிலநாயகம், சங்கவி புவனேசன், சரோனி இவன்சிலின் அன்ரனி ஜெயனாத், அட்சயா சிவபாதசுந்தரம், சரண்ஜா சூரியகுமாரன், குசேதா குகநாதன் ஆகிய மாணவிகள் ஆங்கில மொழி மூலத்தில் 9ஏ பெற்றுள்ளார்கள்.

 

You might also like