யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் இருவர் சாதனை

2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லுரி முதன்மை பெறுபேறுகள் அதிகம் கொண்ட பாடசாலைகளாக காணப்படுகின்றது.

முதல் முறையாக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் இருவர் 9ஏ சித்திகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக காணப்படும் கிளிநொச்சியில் குறித்த மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

You might also like