யாழில் சாதனை படைத்த மாணவனின் எதிர்கால இலட்சியம் இதுதான்..

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியான நிலையில் குறித்த மாணவன் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளான்.

இவ்விடயம் குறித்து அ.அபிநந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எனது தாய் ஆசிரியர், தந்தை மருந்தாளர் எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் நான் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன்.

இந்நிலையில் உயிரியல், விஞ்ஞான துறையில் தொடர்ந்து கல்வி கற்பதற்கு விரும்புகிறேன். அது தவறினால் நோய்கள் பற்றிய ஆய்வுதுறையில் கல்வியை கற்க விரும்புகிறேன். அதேபோல் எனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள் என எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like