விமானியாக கனவு கண்ட இளம்பெண் : விமான விப த்திலேயே ப லியான சோகம்!!

விமானியாக கனவு கண்ட இளம்பெண் : விமான விப த்திலேயே ப லியான சோகம்!!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானியாக பெயர் எடுக்க வேண்டும் என கனவு கண்ட இளம்பெண் விமான விப த்திலேயே ப லியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள Starkville நகரில் பெற்றோருடன் குடியிருந்து வந்தவர் 18 வயதான லேக் லிட்டில்.

இவரே விமான விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மர ணமடைந்தவர். லேக் லிட்டில் அவரது குடியிருப்பு பகுதியில் மிகவும் பிரபலமானவர் மட்டுமின்றி, நகரின் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு முக்கிய பட்டங்களை அள்ளியவர்.

விமான பயிற்சிக்கான உரிமம் பெற்றுள்ள லேக் லிட்டில், எதிர் காலாத்தில் அறியப்படும் விமானியாக வேண்டும் என கனவுடன் வாழ்ந்தவர். இந்த நிலையில் சனிக்கிழமை பயிற்சி மேற்கொள்ள குட்டி ரக விமானத்தில் பறந்தவர், விமானம் விபத்தில் சிக்கியதில் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

தொடர்ந்து மெம்ஃபிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். லேக் லிட்டில், தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஆடியோலஜி பிரிவில் கல்வி பயின்று வருகிறார்.

You might also like