செல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்!!

செல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்!!

இந்திய மாநிலம் கேரளாவில் கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி இளைஞர் தவறி விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெம்பாயம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பிரதீப். தாயார் சரளாவுடன் வசித்து வரும் இவர் கடந்த புதன்கிழமை மாலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 2 அடி தண்ணீர்தான் இருந்துள்ளது. இதனால் அவர் உயிர்தப்பினார். ஆனால் அந்த கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.

அக்கம் பக்கத்தில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் இவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. நீண்ட நேரமாக சத்தம்போட்டதால் தளர்ச்சியடைந்து பிரதீப் மயக்கமிட்டு சாய்ந்துள்ளார்.

3வது நாளான நேற்று அவ்வழியாக சென்ற ஒருவர், கிணற்றில் இளைஞர் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர். சம்பவத்தின் போது பிரதீபின் தாயார் சரளா அவரது உறவினர்களை சந்திக்க வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.

You might also like