விடுத லைப்பு லிக ளின் தலை வரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையுடன் சென்றவர் கை து!

விடுத லைப்பு லிக ளின் தலை வரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையுடன் சென்றவர் கை து!

தமிழீழ விடு தலை பு லிகளின் தலை வரின் புகை ப்படம் அச்சிடப்பட்ட வாராந்த பத்திரிகையை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணு வத்தால் கை து செய்யப்பட்டு பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விடு தலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக யாழிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகையை கொண்டு சென்ற சமயம் குறித்த நபர் கை து செய்யப்பட்டார்.

ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியில் வீதிச் சோத னை சாவடியில் நின்ற படையினரால் குறித்த நபர் கொண்டு சென்ற பத்திரிகைகள் சோத னையிடப்பட்ட பின்னர் கை து செய்யப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவரை விசாரித்த பொலி ஸார் பின்னர் விடுதலை செய்துள்ளனர் .

போ தை பொ ருள் கடத்தலில் விடு தலை புலி களிள் ஈடுபட்டார்கள் என ஜனாதிபதி கடந்தவாரம் தெரிவித்த கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உட்பட மறுப்பு தெரிவித்து விடு தலை புலி கள் அமை ப்பு அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதனை ஒப்பீட்டு பத்தியாக ஒரு பக்கத்தில் எழுதியுள்ளதோடு பத்திரிகையின் முதல் பக்கத்தில் “காலத்தால் உணர்த்தப்படும் வாக்கு மூலங்கள் – பக்கம் 6” என தலைப்பிட்டு தமிழீழ விடு தலை புலி களின் தலைவர் பிரபா கரனின் புகைப்படத்தை குறித்த பத்திரிக்கை அச்சிட்டிருந்தது.

குறித்த பத்திரிகை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு கடந்த சிலவருடங்களாக வாராந்த பத்திரிகையாக வெளிவருகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like