வவுனியாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தினால் வீதி சேதமடையும் நிலையில் : மக்கள் விசனம்

வவுனியாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தினால் வீதி சேதமடையும் நிலையில் : மக்கள் விசனம்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான வாகனமொன்றினால் வவுனியா குட்செட் வீதி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குட்செட் வீதியில் அமைந்துள்ள மஸ்தான் றேடர்ஸ் சொந்தமான பெற்றோல் சேமிப்பு நிலையத்திற்கு தினசரி எரிபொருள் தாங்கி வாகனங்கள் பல வருகை தருகின்றன.

அவ் வாகனங்கள் குட்செட் வீதியில் அமைந்துள்ள ஒர் முச்சந்திக்கு சென்று வாகனங்களை திருப்பி செல்கின்றன. இதன் காரணமாக குறித்த கல்லீட்டு தாறீடப்பட்ட வீதி சேதமடைந்துள்ளது.

எரிபொருள் தாங்கிய வாகனத்தின் சில்லு திரும்பும் சமயத்தில் வீதியினை சேதமடைய வைப்பதாகவும் இது தொடர்பாக பல தடவைகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

இன்றையதினம் அவ்வீதியுடாக வாகனம் திரும்ப முற்பட்ட சமயத்தில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து வேறோரு மாற்றுப்பாதையுடாக குறித்த எரிபொருள் தாங்கிய வாகனம் திரும்பிச்சென்றதினை அவதானிக்க முடிந்தது.

அவ் சமயத்தில் வீதியில் போக்குவரத்து பாதிப்படைந்திருந்ததுடன் எதிர்வரும் சில தினங்களில் இதற்கெதிராக பொதுமக்கள் போராட்டம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like