வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

இன்று வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர்.

சங்கவி மோகன், வராகி வாகீசன், சங்கவி கனகரத்தினம் ஆகிய மூவருமே 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் வினோசிகா மகேஸ்வரன், டெனுஷா ஸ்ரீதரன், இலக்க்ஷிஜா அரிபூரணநாதன் ஆகிய மூன்று மாணவிகளும் 8A சித்திகளை பெற்றுள்ளனர். மேலும் 6 மாணவர்கள் 7எ சித்திகளை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய 144 மாணவர்களில் 122 மாணவர்கள் கணிதப்பாட சித்தியுடன் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இது 85 வீதமாக காணப்படுகின்ற அதேவேளை சுற்று நிருபத்திற்கு அமைவாக மீள எழுதித் தரும் வகையில் 9 பேர் காணப்படுகின்றார்கள்.

பரீட்சைக்கு மொத்தமாக 138 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like