பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்!!

பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்!!

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வேலையை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த தம்பதி தாங்கள் வேட்டையாடிக் கொன்ற ஒரு நீர் யானை, வரிக்குதிரை, சிறுத்தை மற்றும் சிங்கம் ஒன்றின் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தனர்.

இதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை ஆத்திரமுற்றனர். எனவே அந்த தம்பதி நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டை புறக்கணிக்க பேஸ்புக்கிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த சூப்பர் மார்க்கெட் குழுமம், சம்பந்தப்பட்ட தம்பதி தங்கள் பணியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்தது.

நேற்று வட கிழக்கு பிரான்சிலுள்ள அந்த தம்பதி நடத்தி வந்த கடை மூடப்பட்டிருந்ததோடு, அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் கூட்டுறவுக் குழுமமும் அறிவித்தது.

தாங்கள் வேலையை விடுவதைக் குறித்து குறிப்பிட்ட தம்பதி சமூக ஊடகங்களில் எந்த விமர்சனமோ கருத்தோ தெரிவிக்கவில்லை.

You might also like