வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் அதிரடி சாதனை

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் அதிரடி சாதனை

வடமாகாணப் பாடசாலைகளிற்கு இடையிலான 2019ம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் வ/நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் புதிய சாதனைகளுடன் தனது பெயரினை பதித்துள்ளது.

16 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் கே.காவியா தங்கப்பதக்கத்தினை பெற்றதுடன் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் 4 X 100 மீற்றர் அஞ்சல் ஒட்டத்தில் அரிச்சந்திரகுமார் , டனுசன் , கரிகரசுதன் , சரன்ராஜ் , விஸ்வா . கபிஸ்கரன் ஆகிய ஆறு மாணவர்கள் தங்கப்பதங்கத்தினை பெற்றுள்ளனர்.

அத்துடன் ஒட்டநிகழ்ச்சியில் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் 200 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் மற்றும் 100 மீற்றரில் வெண்கலப்பதக்கம் ஆகியவற்றை பி. அரிச்சந்திரகுமார் தனதாக்கி கொண்டதுடன் 1500 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கத்தினை ச.டனுசன் தனதாக்கி கொண்டார். மேலும் 200 மீற்றர் மற்றும் 100 மீற்றரில் வை.கரிகரசுதன் 4வது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் நீளம் பாய்தலில் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் எஸ்.கரிகரன் 4வது இடத்தினையும் 18 வயதின் கீழ் உயரம் பாய்தல் ஆண்கள் பிரிவில் கே.சரன்ராஜ் வெண்கலப்பதக்கத்தினையும் , 4x400m அஞ்சல் ஓட்டத்தில் பி. அரிச்சந்திரகுமார் , ச.டனுசன் , வை.கரிகரசுதன் , கே.சரன்ராஜ் , எஸ்.விஸ்வா , வி.கபிஸ்கரன் ஆகியோர் தங்கப்பதக்கத்தினையும் பெற்றுள்ளனர்.

பெருவிளையாட்டுக்களில் 16 வயதின் கீழ் பெண்கள் வலைப்பந்தாட்டம் 2ம் இடத்தினையும் 18 வயதின் கீழ் பெண்கள் கொக்கி 3ம் இடத்தினையும் வ/நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் தனதாக்கி கொண்டுள்ளது.

2019ம் ஆண்டிற்கான வடமாகாணப் பாடசாலைகளிற்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் வ/நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 18 வயது ஆண்கள் பிரிவு மெய்வல்லுனர் சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டதுடன்,

வடமாகாணப் பாடசாலைகள் தரப்படுத்தலில் வ/நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 8ம் இடத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் வ/தெற்கு கல்விவலயத்திற்கும் பெருமை தேடித்தந்துள்னர்.

You might also like