சற்று முன் வவுனியா விவசாய திணைக்கள வளாகத்தில் பாரிய தீ விபத்து

சற்று முன் வவுனியா விவசாய திணைக்கள வளாகத்தில் பாரிய தீ விபத்து

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தின் அனுசரனை ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (18.07.2019) மதியம் 1.00 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆராய்ச்சி நிலையத்தில் காணப்படும் வயல் நிலத்தில் ஓர் இடத்தில் ஏற்பட்ட தீ வயல் முழுவதும் பரவி பற்றியேறிந்தது.

அதனையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் வயலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ ஏற்பட்ட பகுதி வெற்று வயல் என்பதினால் விவசாய திணைக்களத்தின் ஆராய்ச்சி நிலையத்தின் நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை

தீ விபத்து ஏற்பட்டத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை

You might also like