சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

மலையகத்தில் மழையுடனான காலநிலை காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் மலையகப் பகுதிகளில் உள்ள வீதிகளில் பல இடங்களில் வழுக்கும் நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக நேற்றைய தினம் பல விபத்துக்கள் எற்பட்டுள்ளன.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்க பாதைக்கு அருகாமையிலும் ஹட்டன் – கொழும்பு பிரதான பாதையில் வூட்லண்ட் பசார் பகுதியிலும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே குறித்த வளைவுகள் நிறைந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை குறைத்து கொள்ளலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வூட்லண்ட்பசார் பகுதியில் நேற்று திகதி மாலை சுமார் 2.00 மணியளவில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like