பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பு! சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாருக்கு காத்திருந்த மர்மம்!

பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பு! சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாருக்கு காத்திருந்த மர்மம்!

அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்காபட மாவத்தையில், மிஹிந்தல வீதியில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 64 வயதுடையவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் குறித்து விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் தலையில் இரத்தம் படிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

You might also like