புதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் – மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி!

புதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் – மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி!

பங்­க­ளா­தேஷில் திரு­மண நிகழ்வை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்­களை ஏற்றிச் சென்ற வான் புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் உயிரிழந்தனர்.

தலை­ந­க­ர் டாக்காவிலிருந்து சுமார் 145 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள உலஹ்­பரா பிராந்­தி­யத் திலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பாது­காப்­பற்ற புகை­யி­ரதக் கட­வை­யொன்றை குறித்த வான் கடக்க முயற்­சித்த போது டாக்கா நகரை நோக்கிப் பய­ணித்த புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­ன­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். விபத்து இடம்­பெற்ற போது அந்த வானில் 14 பேர் இருந்­துள்­ளனர்.

இந்த விபத்தில் மண­மகன் மற்றும் மண­மகள் உட்­பட 8 பேர் சம்­பவ இடத்­தி­லேயும் இருவர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலை­யிலும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

You might also like