மக்களுக்கு உதவுவதால் உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ்சுக்கு இந்த நிலையா!

மக்களுக்கு உதவுவதால் உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ்சுக்கு இந்த நிலையா!

உலகில் அதிக சொத்து கொண்ட இரண்டாவது பணக்காரர் என்ற பட்டியலில் இருந்த பில்கேட்ஸை பிரான்சைச்சேர்ச்த பெர்னார்ட் அர்னால்ட் ((Bernard Arnault)) பின்னுக்குத் தள்ளியுள்ளதாக புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் பிரான்சின் LVMH நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்2-ம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம்பர்க் தெரிவித்துள்ளது.

தற்போதும் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளதாக குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

பில்கேட்ஸ்சின் அறக்கட்டளை உலகம் முழுவது பல இடங்களில் பின்தங்கியுள்ள மக்களின், குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு உதவிவருவது குறிப்பிடத்தக்கது

தவிர மக்களுக்கு உதவியதால் உலகில் முதலாவது பணக்காரராக பலகாலமாக இருந்துவந்த பில்கேட்ஸ் தற்போது பின்தங்கியுள்ளதாகவும், பில்கேட்ஸ்சின் அறக்கட்டளையின் சேவைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர் இணையத்தளவாசிகள்.

You might also like