திருமணம் முடிந்த 3 நாட்களில் பலியான கணவன்: உயிருக்கு போராடும் மனைவி

திருமணம் முடிந்த 3 நாட்களில் பலியான கணவன்: உயிருக்கு போராடும் மனைவி

திருச்சியில் திருமணம் முடிந்த மூன்று நாட்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி லால்குடியை சேர்ந்த மோகன் (24) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் ரமணி (20) என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, கடந்த 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் விருந்துக்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மோகனின் நண்பன் ரஞ்சித் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது அவர்களின் பின் புறமாக வந்துகொண்டிருந்த லாரி திடீரென அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் ரஞ்சித் மற்றும் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரமணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You might also like