சற்று முன்  வவுனியா திருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்

சற்று முன்  வவுனியா திருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் கோவில் வீதியில் இன்று (18.07.2019) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞரோருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாண்டிகுளத்திலிருந்து கோவில் வீதியுடாக குருமன்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் அதே பாதையில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த நல்லலிங்கம் உசாந்தன் (வயது- 23) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருவதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதியினை கைது செய்துள்ளனர்.

You might also like