வவுனியா விபுலானந்த கல்லூரியில் ஆர்.மிதுசிகா  9A சித்திகளை பெற்று முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஆர். மிதுசிகா  9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் எஸ். நிதுர்சன்  8A,B , ரீ. தர்சிகா 8A,B , கே. தவாரகன் 8A,B , ரீ. விதுரா 8A,C , என். அபினயா 8A,C சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

167மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் நியுஸ்வன்னி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

You might also like