செட்டிகுளம் வீரபுரம் மக்களின் காணிப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – சத்தியலிங்கம்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீரபுரம் கிராமமானது குடியேற்றக்கிராமமாகும். இங்கு 1996 களில் 400 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினூடாக வீட்டுத்திட்டமும்இ தலா 6 பரப்பு காணி குடியிருப்பதற்கும்இ வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வாரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வீதம் மேட்டுகாணிகளும் வழங்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான காணி அனுமதிப்பத்திரங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் அங்கிருந்த மக்கள் இந்தியாவுக்கும்இ வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை இவர்களுக்கு வழங்கப்பட்ட மேட்டுக்காணிகளை அயலிலுள்ள கிராமங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலரும்; ஊர்காவல் படையினரும் தமது தேவைகளுக்காக காடுகளை துப்பரவு செய்வதாக பொதுமக்களால் கடந்தவாரம் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அமைச்சரின் தலையீட்டினால் அத்துமீறிய காணி சுவீகரிப்பு முயற்சி அரசாங்க அதிபருடாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனைதொடர்ந்து அமைச்சரின் வேண்டுகோளிற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் றோகனபுஸ்பகுமார தலைமையில் விசேட கூட்டமொன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் வவுனியா தெற்கு(சிங்கள) பிரதேச செயலாளர்இ வெங்கலச்செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர்இ பிரதேச செயலகங்களின் காணிக்கிளைகளின் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மற்றும் காணிக்கான ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு காணியை வழங்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவெட்டப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் இரண்டு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படவேண்டுமென அரசாங்க அதிபரை கேட்டுக்கொண்டார்.

You might also like