வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை!!

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 234 மாணவர்கள் தோற்றிய நிலையில் 10 மாணவர்கள் 9A சித்தியும், 14 மாணவர்கள் 8A, B சித்தியும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

இதன்படி ச.சிவலக்சன், ச.மதுமிதன், வி.ஜரூஸ், சி.சனிஸ்வ்காந், ஜெ.பிரவீன், உ.ஜதுசன், பி.கீர்த்திகன், ப.கோகுலவதனன், க.கிசோபன், க.திவாகரன் ஆகியோர் 09A சித்தி பெற்றுள்ளனர்.

சி.பகவான், யோ.மயூரன், ஜே.ஜெபநேசன், தி.செல்வன், ரா.சயுலன், சி. பிருசாந், ம.லக்சியன், கு.தார்மீகன், ப.துரைஞானவேலன், பா.அபிரதன், அ.ஜெரோசன், ல.கிருபாகரன், ச.சிவகுமாரன் ஆகியோர் 08A, B சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் நியுஸ்வன்னி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

You might also like