homepage side 2

முல்லைத்தீவு ஏ-35 வீதியில் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

முல்லைத்தீவு ஏ-35 வீதியில் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

கிளிநொச்சி- பரந்தன்- முல்லைத்தீவு ஏ-35 வீதியில் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் செல்லும் பெண்களிடம் அவர்கள் அணிந்து செல்லும் தங்கச் நகைகள் அறுத்து செல்லுகின்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன

இன்று காலை அலுவலக கடமைக்காக சென்று கொண்டிருந்த கிராம அலுவலரை மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் அவர் அணிந்திருந்த சங்கிலியினை அறுத்துச் சென்றுள்ளனர்

குறித்த சம்பவம் ஏ-35 வீதியின் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் ஏ 35 வீதியில் முரசுமோட்டை அண்மித்த பகுதியில் வீதியால் பயணித்த பெண்ணொருவரிடம் அவரை பின் தொடர்ந்து நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்துக்கு அண்மித்த பகுதியிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை பின்தொடர்ந்து வந்த இருவர் அவர்களை தள்ளி விழுத்தி சங்கிலியை அபகரித்துச் செல்ல முற்பட்ட சமயம் குறித்த பெண்கள் கூச்சலிட்டதை அடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக இவ்வாறான சம்பவம் இந்தப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலையில் தற்போது முரசுமோட்டை புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like