வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாயத்தில் ஆ.சங்கீதன் முதலிடம்
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாய மாணவன் ஆ.சங்கீதன் 7A,2B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் பிலோமீரா அன்ரனி ஜோர்ஜ் விக்டர் ராஜா 7A,B,C, றொகேந்திரன் சயந்தன் 6A,B,C.S, சுகுணலிங்கம் சுரேஸ் 4A, 3C, 2S , கவிப்பிரியா கணேசன் 4A,2B,C,S, சுகாந்தினி பிரான்விக்னராஜா 4A, 2B,C,S சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் நியுஸ்வன்னி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்