கிளி. புனித தெரேசா பெண்கள் கல்லூரியில் இரண்டு பேர் 9ஏ : 54 பேர் சித்தி

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.சா தர பரீட்சை முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில, கிளிநொச்சி புனித தெரேசா பெண்கள் கல்லூரியில் 54 பேர் சித்தியடைந்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றியவர்களில் 98.18 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் செல்வி. எந்தனி சாந்தா மரியம் பிள்ளை தெரிவித்தார்.

பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இரண்டு பேர் 9ஏ சித்திகளையும், இரண்டு பேர் 8ஏ 1பீ சித்திகளையும், ஒருவர் 8ஏ 1சீ சித்திகளை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிடார்.

இதேவேளை, 87.27 வீதமானவர்கள் கணிதப்பாடத்துடன் சித்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

You might also like