தண்டப்பணம் விதித்தால் என்ன செய்ய வேண்டும்? சாரதிகளே இது உங்களுக்கு தெரியுமா?

வீதிகளில் வாகனங்களை செலுத்தும் ஓட்டுனர்கள் அனைவரினதும் நலன்கருதி செயற்படுதல் அவசியமாகும். வாகன ஓட்டுனர்கள் விழிப்புணர்வுடன் செயற்படும் போது விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும்.

அதேவேளை சில ஓட்டுனர்கள் வீதி விதிகளை மீறி செயற்படுகின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. இவ்வாறு வீதி விதிகளை மீறி செயற்படும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கும் நடைமுறை இலங்கையில் காணப்படுகிறது.

அந்தவகையில், ஓட்டுனர்களுக்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கே அபராதப் பற்றுச் சீட்டு வழங்கப்படும். ஓட்டுனர் அபராத தொகையை செலுத்தவில்லை எனில் குறித்த ஓட்டுனர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.

தகுதி வரையறைகள் : போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பிடிப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

 • வழக்கு – பொலிஸாரால் அபராதம் சுமத்தப்பட்ட ஓட்டுனர்
 • பொலிஸ் அலுவலர் உடனடி அபராத அறிக்கையை வழங்குதல் – (ஆண்-பெண்)ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தல்.

ஓட்டுனர் உரிமத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்: பொலிஸ் நிலையத்தில் – ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று போக்குவரத்து பொலிஸ் பிரிவிடமிருந்து அபராத பற்றுச் சீட்டை பெறுதல்.

குறிப்பு:

ஓட்டுனர் அபராத பற்றுச் சீட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து பெறுவதற்கு உடனடி அபராத அனுமதியை கொண்டுவர வேண்டும்.

அஞ்சல் அலுவலகத்தில் – ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்தில் பணத்தை செலுத்தி பணம் செலுத்தியதை நிரூபிப்பதற்காக பற்றுச் சீட்டை பெறவேண்டும்.

குறிப்பு:

ஓட்டுனர் 14 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் அவருக்கு உடனடி அபராத அனுமதியே தற்காலிக உரிமமாக வழங்கப்படும் பணம் செலுத்தவில்லை என்றால் அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார்.

சமர்ப்பிக்கும் வழிமுறைகள்: பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் (போக்குவரத்து பிரிவில்) சமர்ப்பித்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

படிவத்தின் பெயர் :

 • உடனடி அபராத அனுமதி – ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலர் படிவம் (M.T.A 37) வழங்குவார்.
 • அபராத பற்றுச் சீட்டு – வழக்கு தொடர்வதற்குப் பதிலாக அபராதம்.

விண்ணப்ப படிவம்:

பொது மக்கள் பூர்த்தி செய்வதற்கு எந்த விண்ணப்ப படிவமும் இல்லை. ஆனால் பொலிஸ் அலுவலர் பூர்த்தி செய்வார். (போக்குவரத்துப் பிரிவு) கீழே கொடுக்கப்பட்டுள்ள பற்றுச் சீட்டை மக்களுக்கு வழங்கும்.

 • ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம்

குறிப்பு :

ஓட்டுனரிடம் அந்த நேரத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லை எனில் (ஆண்-பெண்) அவர்களுக்கு பொலிஸ் 405 பற்றுச் சீட்டை அபராத அறிக்கையை வழங்கும்.

ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம். (DOP 405)

சேவைத்தொடர்பான கட்டணங்கள்:

அபராதம் – வழக்குத் தொடர்பவரின் அபராத ஆவணங்களில் கிடைக்க பெறும் (படிவம் பொலிஸ் DOP F397)

தேவையான இணைப்பு ஆவணங்கள்: பொலிஸ் அதிகாரி உடனடி அபராதம் வழங்கும் அந்த நேரத்தில் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் தேவைப்படும்.

சேவை பொறுப்புக் குழு:

 • அலுவலக பொறுப்பாளர் (OIC) – பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து கிளையில்
 • அலுவலக பொறுப்பாளர் (OIC) – பொலிஸ் நிலையத்தில்

போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:உறுதியான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் பொலிஸ் நிலையம் வழங்காது.

அபராத சீட்டிற்கு பணம் செலுத்துவதற்கான படிமுறை..

 • படி 1: ஓட்டுனர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல்.
 • படி 2: போக்குவரத்து பொலிஸ் ஓட்டுனரிடமிருந்து உரிமத்தை பறிமுதல் செய்தல்.
 • படி 3: பொலிஸ் உடனடிஅபராத அறிக்கையை வழங்குதல்.
 • படி 4: ஓட்டுனர் அலுவலகத்திற்குச் சென்று போக்குவரத்து பிரிவிடமிருந்து பணம் செலுத்துவதற்கான படிவத்தை பெறுதல்.
 • படி 5: ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பணம் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டை வாங்குதல்.
 • படி 6: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பற்றுச் சீட்டை காண்பித்து பொலிஸிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தை திரும்பப் பெறுதல்.
You might also like