அரசாங்க களஞ்சியங்களில் காலாவதியாகும் மருந்துப் பொருட்கள்! 11 கோடி நட்டம்

அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான மருந்துக் களஞ்சியங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மருந்துகள் காலாவதியாகும் காலகட்டத்தை நெருங்கியுள்ளன.

பெருந்தொகைப் பணம் செலவழித்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மருந்துப் பொருட்கள் பயன்படுத்த முடியாமல் காலாவதியான நிலையில் ஒதுக்கப்பட நேர்ந்தால் அதன் மூலம் சுமார் 11 கோடி ரூபா அளவிலான நட்டம் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்குள் இந்த மருந்துப்பொருட்கள் கட்டம் கட்டமாக காலவாதியாகும் திகதியைக்கொண்டுள்ளன.

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் குறித்த மருந்துப் பொருட்களை உரிய முறையில் விநியோகிக்கத் தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like