தமிழன் கூகுள் CEO-சுந்தர் பிச்சையின் வேலைக்கு ஆபத்தா? என்ன காரணம்? வெளியான உண்மை தகவல்

தமிழன் கூகுள் CEO-சுந்தர் பிச்சையின் வேலைக்கு ஆபத்தா? என்ன காரணம்? வெளியான உண்மை தகவல்

தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் வேலை காலியாக இருப்பதாக கூறி சமூகவலைத்தளங்களில் வைரலான தகவலுக்கு உண்மையான நிலவரம் தெரியவந்துள்ளது.

கூகுளில் வேலை கிடைப்பது என்றால் அவ்வளவு சாதரண விஷயமல்ல, இதில் வேலை கிடைப்பதற்காக பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுளில் சிஇஒ-வாக இருக்கிறார். தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இவரை தற்போது வரை பலரும் ரோல் மொடலாக வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லிங்டுதின் வேலை வாய்ப்புப் பக்கத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் கூகுளில் சுந்தர் பிச்சை சிஇஓ-வின் வேலை காலியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட மக்கள் சும்மா விடுவார்களா? லட்சக்கணக்கானோர் உடனே அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் லிங்டுதின் வேலை வாய்ப்பு பக்கத்தில் யார் வேண்டுமானாலும் பொய்யான தகவல்களை பகிரலாம் என்பதை நிரூபிப்பதற்காக நெதர்லாந்தைச் சேர்ந்த அவர் இப்படி ஒரு விளம்பரத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இப்படி ஒரு தவறு இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டிய அவருக்கு நன்றி சொன்ன லிங்டுதின் நிறுவனம், அதன் பின் அந்த பதிவை நீக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி சுந்தர்பிச்சை இந்த வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதால், அவர் வேலையை விட்டு நிற்பதற்கே வாய்ப்பே இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

You might also like