இன்றைய ராசிபலன் 01.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 01.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

எதிர்பாராத பணவரவும் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்:

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உற்சாகமான நாள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

மிதுனம்:

இன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் ஆலய தரிசனம் செய்வீர்கள்.

சிம்மம்:

திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களின் வரவும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டு. எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

துலாம்:

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரியங்களில் வெற்றி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்க நேரிடும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

கும்பம்:

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

மீனம்:

காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

You might also like