புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்

இலங்கை புகையிரத திணைக்களமானது சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

இது தொடர்பான கால அட்டவணையை புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த விசேட புகையிரத சேவைகள் எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் புத்தாண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பிலிருந்து தூரப்பகுதிகளுக்கும், தூரப்பகுதிகளிலிருந்து கொழும்புக்கும் இவ்வாறான விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விசேட சேவையின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு ஏப்ரல் 12ஆம் திகதி காலை பத்து மணிக்கு கொழும்பிலிருந்து விசேட புகையிரதம் புறப்படவுள்ளது.

புத்தாண்டின் பின்னர் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு குறித்த புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

எனினும் இந்த விசேட புகையிரத போக்குவரத்து ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இப்பிரதேசங்களுக்கு வழமையான ரயில் சேவைகள் மாத்திரமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like