குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டுபிடிக்க புதிய இயந்திரம்

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் இந்த இயந்திரம் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடிபோதையில் உள்ள சாரதிகளை கைது செய்யும் போது மேற்கொள்ளப்படுகின்ற மூச்சுக்காற்று சோதனைப் பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டினை இலகுபடுத்துவதே இந்த இயந்திரத்தின் நோக்கமாகும்.

அதற்கடைய பிரேடலைஸர் என்ற இந்த இயந்திரம் முதல் முறையாக போக்குவரத்து பிரிவுகளிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தின் செயற்பாடு தொடர்பில் பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

You might also like