சுற்றுலா விசாவில் வேலையா? அவுஸ்திரேலியா அரசு கொடுக்கும் வரப்பிரசாதம்!

சுற்றுலா விசாவில் வேலையா? அவுஸ்திரேலியா அரசு கொடுக்கும் வரப்பிரசாதம்!

வளர்ந்த நாடுகளில் முன்னணி நிலையில் உள்ள அவுஸ்திரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே. இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில், இவ்விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே அவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இப்பணிகளில் வெளிநாட்டவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் அரசு இதனை திட்டமிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசின் இத்திட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சம்மேளனம் கொள்கையளவில் சம்மதமர தெரிவித்துள்ளதுடன் விவசாய விசா நடைமுறை கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

“மற்ற சர்வதேச பார்வையாளர்களை விட Backpacker விசாவில் வருபவர்கள் பிராந்திய பகுதிகளுக்கு அதிகம் செல்வதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார் குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோலிமேன். அவர்கள் பிராந்திய பொருளாதாரத்தை உயர்த்த உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் இவ்விசாவுக்கு செயல்பாட்டு அளவிலான ஆங்கிலம் தெரிந்திருப்பது கட்டாயம் ஆகும்.

கடந்த மார்ச் மாதத்தில் இவ்விசா மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டினர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றி சென்றுள்ளனர்.

You might also like