வவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் திறப்பு விழா
வவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் இன்று ( 29.03.2017) பாடசாலையின் அதிபர் செ.பவேந்திரன் அவர்களின் அழைப்பின் பேரில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி லிங்கநாதன், தியாகராஜா அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து பாடசாலையின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
நெடுங்கேனி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து பான்ட் வாத்திய இசையுடன் நெடுங்கேனி மகா வித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தனர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி லிங்கநாதன், தியாகராஜா மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ஸ்ரீஸ்கந்தராஜா , நெடுங்கேனி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார , பிரதேச செயலாளர் சத்தியசீலன் , சமயத்தலைவர்கள், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமரர் செல்லத்துரை சிதம்பரப்பிள்ளை ( முன்னாள் கிராம சேவையாளர் – நெடுங்கேனி) அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய 70வது வயது பூர்த்தியினையும் முன்னிட்டு அவர்களின் நினைவாக பாடசாலையின் பிரதான நூழைவாயில் அன்னாரின் குடும்பத்தாரினால் அமைத்து பாடசாலை சழூகத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.