ஆயிரம் மருத்துவகுணம் கொண்ட தேனில் இப்படியொரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஆயிரம் மருத்துவகுணம் கொண்ட தேனில் இப்படியொரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இயற்கை நமக்கு பல ஆரோக்கியமான பொருட்களை கொடையளித்துள்ளது. அப்படி இயற்கை அளித்துள்ள முக்கியமான கொடையில் ஒன்றுதான் தேன் ஆகும். பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் தேன் சில தீமைகளைக் கொடுக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஆம் தேனிலும் சில பக்கவிளைவுகள் காணப்படுகின்றன. அவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தேனை பெரும்பாலானோர் அப்படியே சாப்பிடுகின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். ஏனென்றால் பதப்படுத்தப்படாத தேனை சாப்பிடும்போது புட் பாய்சனாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பதப்படுத்தாத தேனில் க்ளோஸ்ட்ரியம் போட்லினம் என்னும் பொருள் இருப்பதால் இதனை ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இம்மாதிரியான குழந்தைகளுக்கு போட்யூலிசம் என்னும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

இதில் பிரக்டோஸ் நிறைந்திருப்பதால், இது உங்கள் சிறுகுடலின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனில் குறுக்கிடும். இது உங்களின் இரைப்பை குடல் அமைப்பில் நீண்டகாலபாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சிலசமயம் இதனால் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படும்.

தேனில் தேனீக்களின் கொடுக்குகள், பூச்சிக்கொல்லிகள், சிறு பூச்சிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அலர்ஜியை ஏற்படுத்துகின்றது. இதனால் ஆபத்தான அனாபிலாக்டிக் ஷாக் என்னும் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இரத்தத்தின் சர்க்கரை அளவினை அதிகரிப்பதால் இதனை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் இனிப்பு மற்றும் அடர்த்தியான குணம் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

இயற்கை இனிப்பு பொருளான தேன் உங்கள் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது நமது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் கிரயனோடாக்சின்ஸ் என்னும் இரசாயனங்கள் உள்ளது. இந்த இரசாயனங்கள் பதப்படுத்தும் போது நீக்கப்படுகிறது. ஆனால் பதப்படுத்தாத தேனை சாப்பிடும்போது அது உங்கள் நரம்பு செல்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக, இது நமது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடுகளுக்கு இடையூறு செய்கிறது.

தேனில் அதிக கலோரிகள் காணப்படுவதால் இது உடல் எடையினை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

You might also like